இராவணாஎல்ல நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கற்பாறையில் வழுக்கி விழுந்து கடுங்காயங்குள்ளாகிய நிலையில் பதுளை அரசினர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லூகாஸ் வோல்டர் என்ற 22 வயது நிரம்பிய இளைஞரே இராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் கற்பாறையில் வழுக்கி விழுந்தவராவார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி நீர்வீழ்ச்சிக்ருகாமையில் உள்ள கற்பாறையின் மீது ஏற வேண்டாமென்று அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை போடப்பட்டிருந்தும் அதனை கருத்திற் கொள்ளாமல்ஜெர்மன் இளைஞர் செல்லும் போதே அவர் வழுக்கி விழுந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாதி ஏ.எம்.கே. அலகியவன்ன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.