பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொக்கேன் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லையெனவும், வாகனத்துக்கு டீசல் அடிப்பதற்கே எம்.பி.க்களிடம் பணம் இல்லாது கஷ்டப்படுகின்றார்கள் எனவும் ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
எமக்கு கமிஷன் எடுப்பதற்காவது இந்த அரசாங்கம் விட்டுவிடுவதில்லை. இவ்வாறிருக்கும் நிலையில் மதுபான போத்தல் ஒன்றை கொள்வனவு செய்வதற்கே எம்மிடம் பணம் இல்லாதிருப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுக் கூட்டமொன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.