அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

304 0

வட,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லையெனத் தெரிவித்து அமெரிக்காவின் தலையீட்டினைக்கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நல்லூர் ஆலய முற்றிலில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் காத்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு, அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கத்தினால் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இந்த கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த போராட்டத்தின் பிரதான விடயமாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிடவேண்டும் எனக்கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.