முல்லைத்தீவு மாவட்டம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

326 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, வடக்கில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால்,முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும், இன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி போன்ற நகர்ப்பகுதிகள் எங்கும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரச பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை.

இதேவேளை பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகளும் இயங்கவில்லை.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டமே வெறிச்சோடி காணப்படுவதை அவதானிக் முடிவதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.