ஸ்பெயினில் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்து நாய்க்கு விருந்தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டை சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ கோமஸ் (வயது 26). இவர் 66 வயதான தனது தாயுடன் வாழ்ந்து வந்தார். ஆல்பர்ட்டோ கோமசுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆல்பர்ட்டோ கோமசின் தாய் திடீரென மாயமானார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவரை காணவில்லை என அவரது தோழி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஆல்பர்ட்டோ கோமஸ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆல்பர்ட்டோ கோமஸ் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆல்பர்ட்டோ கோமசை போலீசார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கஞ்சா வாங்குவதற்கு பணம் தராததால் தாயை கொலை செய்தததும், அவரின் உடல் பாகங்களில் சிலவற்றை தனது செல்லப்பிராணியான நாய்க்கு உணவாக வழங்கியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.