மஹிந்தவுக்கு மைத்திரி பதில்

347 0

maithiry-680x365முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த திட்டங்களில் நாட்டப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை அகற்றி விட்டு தமது பெயரை பதிவு செய்து அதனை திறந்து வைப்பது தமது கொள்கை அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவை திவுலாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார் இந்த அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை.

தாங்கள் செய்ததையே இந்த அரசாங்கம் திறந்துவைக்கின்றது என்று கூறுகின்றார்.

இதற்கு பதில் வழங்குவதா இல்லையா என்று சிந்தித்து வந்தேன்.

அண்மையில் கூட அவர் இது குறித்து கருத்து தெரிவித்திருப்பதால், அதற்கு பதில் கூறவேண்டும் என எண்ணினேன்.

கடந்த அரசாங்கம் இடைநிறுத்திய அபிவிருத்திகளை முன்கொண்டுச் செல்ல வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடமை.

அது அவ்வாறு இருக்க, எந்த பெயர் பலகையையும் உடைத்தெறிந்து விட்டு அதற்கு தனது பெயர் எங்கேயும் சூட்டிக்கொள்ளவில்லை.

அது தமது கொள்கையும் கிடையாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.