இலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன் இன மனிதர்கள் வாழ்ந்தமை தொடர்பில் ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Griffith பல்கலைகழக மாணவர்களும் கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் Oxford மற்றும் Queensland மாணவர்களும் ஒன்றிணைந்திருந்தனர்.
இவர்கள் குரங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவிற்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில் இலங்கையின் மழைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன் இன மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் தற்பொழுது கிடைக்கப்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் பயன்படுத்திய எலும்புகள் மற்றும் கற்களால் ஆன நூதனமான ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காலத்தில் தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அவர்களின் அறிவுத்திறன் அதிகமாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காலத்தில் இலங்கையில் இருந்த காலநிலையின் அடிப்படையில் இலங்கையின் மழைக்காடுகளில் யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்றிருந்த நினைத்திருந்த நிலையில் இவ்வாறு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் ஊடாக அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.