அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்து பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டி இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரங்களும் ஒரு தனிமனிதனிடம் காணப்படும் பொழுது அங்கு ஒரு கட்டத்தில் தான்தோன்றித்தனமாக அரசியல் நிர்வாகங்களே இடம்பெறும். இதுரை காலமும் நாட்டில் எந்த தலைவர்களும் அரசியலமைப்பினையும், நிறைவேற்று அதிகாரத்தையும் முறைகேடாக பயன்படுத்திவிலலை. அதனால் எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்பினை தெரிவிக்கவில்லை.
எனினும் தவறான செயற்பாடுகளுக்கு நிறைவேற்று அதிகாரத்தை எவ்வாறு பயன்படுதத் முடியும் என்பதற்கு கடந்த வருடத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.