போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

267 0

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட அதிகளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையின் அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
அவர்களின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக முன்னெடுக்கப்படும் இந்த உன்னத பணிக்கு தனது ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு எனத் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் தொகையை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளை தளபதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப், பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டீ.ஏ.சி.தனபால ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, கடந்த சுற்றி வளைப்புகள் தொடர்பிலான தகவல்களையும் கேட்டறிந்தார்.