வடக்கு ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரத்தில் திட்டமிட்ட வகையிலான தாக்குதல் ஒன்றை தாலிபான் போராளிகள் மேற்கொண்டுள்ளனர்.
நள்ளிரவு வேளையில் நான்கு திசைகளிலும் இருந்து ஒரே நேரத்தில் இந்த நகரம் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருந்த போதிலும், ஆப்கானிஸ்தானிய துருப்பினர், தாலிபான்களினால் கைப்பற்றப்பட்டிருந்த நகரை மீள கைப்பற்றியுள்ளதாக நகர ஆளுனர் மஃமூட் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்திலும், போராளிகள் இந்த நகரத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததாக தெரிவித்த ஆளுனர், பின்னர் நேற்றோவின் ஒத்துழைப்புடன் ஆப்கானிஸ்தானிய இராணுவம் மீள நகரை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.