ஸ்திரமானதும், பலமானதுமான அரசாங்கமொன்று நாட்டில் இல்லாத காரணத்தினால், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியாதுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேற்கொள்வது கடினமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திவுலபிடியவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“எவ்வாறானதொரு நாட்டை நாம் எதிர்க்காலத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் பலமான அரசாங்கம் இருந்தமையாலேயே, வெளிநாட்டு முதலீடுகள் இங்கு கொண்டுவரப்பட்டன. முதலீட்டாளர்கள் அச்சமின்றி இருந்தார்கள்.
ஆனால், இந்த அரசாங்கம் வந்தவுடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் மாறியவுடன் அபிவிருத்தி செயற்பாடுகள் நிறுத்தப்படுமாகவிருந்தால், நிச்சயமாக முதலீடுகளை செய்ய எவரும் முன்வர மாட்டார்கள்.
இதன்விளைவாகவே 4 வருடங்கள் கடந்தும், இந்த அரசாங்கத்தால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்