தேசிய அரசாங்கம் சட்ட விரோதமானது என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளின் இணக்கமும் இல்லாமல் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் சட்ட விரோதமானது என்று தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கலாநிதி விமலதர்ம அபேவிக்ரம மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோர் இதனை தாக்கல் செய்தனர்.
இதனை பிரதம நீதியரசர் கே.சிறிபவன் தலைமையிலான 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு பரிசீலித்த போது, நாடாளுமன்ற செயற்பாடுகளில் நீதிமன்றத்தினால் தலையிட முடியாது என்று தெரிவித்து மனு ரத்து செய்யப்பட்டது.