பொகவந்தலாவ நகரில் நாளை 24 ஆம் திகதி நடைபெறவிருந்த 1000 ரூபா வேதன போராட்டமானது நீதிமன்ற தடை உத்தரவினால் இடைநிறுத்தபட்டுள்ளதாக சிவில் அமைப்பின் பணிப்பாளர் எஸ்.டி. கனேசலிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
24 ஆம் திகதி பொகவந்தலாவ பகுதிக்கு 155 வீடுகள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்டதை கையளிக்க பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தாணிகர் மலைநாட்டு வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துக்கொள்ள உள்ளதால் இத்தடை உத்தரவை பொகவந்தலாவ பொலிஸார் பெற்றுள்ளனர்,
மேலும் அங்கு பொலிஸார் உட்பட அதிரடிபடையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது எனவும் இந்த போராட்டம் இடைநிறுத்தபட்டு வேறு ஒரு தினத்தில் மேற்கொள்ள உள்ளதாகவும் அன்றையதினம் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் கலந்து கொள்ள உள்ளதாக பணிப்பாளர் கனேசலிங்கம் தெரிவித்தார்