ஜனாதிபதி பதவிவிலகுவதே பொருத்தமானதாக அமையும் – பிமல் ரத்நாயக்க

253 0

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் நோக்கத்தில் அரசியலமைப்பு பேரவையினை சாடும் ஜனாதிபதி பதவி விலகுவதே பொருத்தமானதாக அமையும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கும் தகைமை ஜனாதிபதிக்கு கிடையாது. இவரது கருத்துக்கள்  அனைத்தும்  ஏற்றுக்கொள்ள முடியாது.  அரசியலமைப்பு பேரவை   நூறு  சதவீதம் சிறப்பானது என்று  மக்கள் விடுதலை  முன்னணியினரும் குறிப்பிடவில்லை. ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றது  அவற்றை  சுட்டிக்காட்டியே   மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் இன்று கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர்.    

கடந்த காலங்களில் அரசியலமைப்பினை தொடர்ச்சியாக  துஷ்பிரயோகம் செய்தமையினையும், அதனை உயர் நீதிமன்றம் உணர்த்தியமையினையும் ஒருபோதும் மறந்து விட கூடாது. 

ஆகவே அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட  வேண்டியது அல்ல  பலப்படுத்த வேண்டும் என்றார்.