முன்னைய அரசாங்கக்காலத்தில் மத்திய வங்கியின் ஊடாக இடம்பெற்ற நிதிமுறைக்கேடு தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக அவர் இன்று முற்பகல் நிதிமோசடிகளுக்கு எதிரான காவல்துறை பிரிவில் முன்னிலையானார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
எவென்ட்காட் வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றபோது கோட்டாபய ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும் அவரின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டது.
எனினும் இன்று அந்த கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.