இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு நாளை இந்தியாவுக்கு செல்கிறார்.
நியூஸிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் வெலிங்டனில் இருந்து நேரடியாக புதுடில்லிக்கு பயணிக்கிறார்.
இந்தியாவில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பல அமைச்சர்களை சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் உலக பொருளாதார பேரவை எதிர்வரும் 6ஆம் திகதி புதுடில்லியில் ஒழுங்குசெய்துள்ள இந்திய பொருளாதார மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளனர்.