பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கை

399 0

downloadபொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கையின் நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் ஆர் எச் எஸ் சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுநலவாய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.

இதனையடுத்து ஒக்டோபர் 7 முதல் 9 ஆம் திகதிவரை, சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் சபை அமர்வு இடம்பெறவுள்ளது