இலங்கையில் வெப்பம் – 2 லட்சம் பேர் பாதிப்பு

287 0

hottest-monthஇலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்துடனான காலநிலையினால் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, குருணாகல் வவுனியா கிளிநொச்சி இரத்தினபுரி ஹம்பந்தோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள், வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களே வரட்சியினால் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக வெப்பநிலையினால் விவசாயத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.