எத்தியோப்பியாவில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின்போது சன நெரிசலில் சிக்கி 52 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் அடிஸ் அபாபா பகுதியில் இருந்து 25 மைல்கள் தொலைவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது எத்தியோப்பிய காவல்துறையினரால் கண்ணீர் புகை, றப்பர் தோட்டாக்கள் மற்றும் தடிகள் கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.