கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம்!

515 0

ஊடகப்பணியின் போது வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களது குடும்பங்களிற்கான இடைக்கால நிவாரணமொன்றை வழங்க ஜனாதிபதி மற்றும் ஊடக அமைச்சு முன்வந்துள்ளது.

அண்மையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக அமைப்பு பிரதிநிதிகளுடன்; ஊடக அமைச்சின் செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுக்களின் போது படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான நீதி வழங்கும் விசாரணையிலோ அல்லது அதற்கான பொறிமுறையிலோ குறுக்கிடாத வகையில் குறித்த இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கான விண்ணப்பங்களை குடும்பங்களிடமிருந்து பெற்று பரிந்துரைகளை யாழ்.ஊடக அமையம் சமர்ப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.இதற்கேதுவாக யாழ்.ஊடக அமையம் பரிந்துரைகளிற்கான உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

இணைக்கப்பட்டுள்ள பெயர் விபரங்களை உடைய கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் அல்லது ஊடகப்பணியாளர்களது குடும்பங்கள் உடனடியாக யாழ்.ஊடக அமையத்துடன் (இல:84ஏ,இராசாவின் தோட்டம் வீதி,யாழ்ப்பாணம் ) நேரடியாகவோ அல்லது 021-3202622 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கோரப்படுகின்றீர்கள்.

மேலதிக தகவல்களிற்கு இணைப்பு பணியில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் கு.செல்வகுமார் அல்லது த.வினோஜித் உடன் தொடர்புகொள்ளவும் கோரப்பட்டுள்ளது.

  1. கண்ணமுத்து அரசகுமார் ஊடகப்பணியாளர்
  2. டீ.செல்வரட்ணம் ஊடகப்பணியாளர்
  3. யோககுமார் கிருஸ்ணபிள்ளை ஊடகப்பணியாளர்
  4. கே.நவரட்ணம் ஊடகப்பணியாளர்
    05.சுப்ரமணியம் சுகிர்தராஜன் ஊடகவியலாளர்
  5. எஸ்.ரி.கணநாதன், ஊடக நிறுவன முகாமையாளர்
  6. பஸ்ரின் ஜோர்ஜ் சகாயதாஸ் ஊடகப்பணியாளர்
  7. ராஜரட்ணம் ரஞ்சித்குமார் ஊடகப்பணியாளர்
  8. மரியதாசன் மனோஜன்ராஜ் ஊடகப்பணியாளர்
  9. சதாசிவம் பாஸ்கரன் ஊடகப்பணியாளர்
  10. எஸ்.ரவீந்திரன் ஊடகப்பணியாளர்
  11. சந்திரபோஸ் சுதாகர் ஊடகப்பணியாளர் (வவுனியா)
    13 .சங்கரசிவம் சிவதர்சன்(வன்னி) ஊடகவியலாளர்
  12. அந்தோனிப்பிள்ளை செரின் சித்தராஞ்சன் ஊடகப்பணியாளர்
  13. வடிவேல் நிமலராஜ் ஊடகப்பணியாளர்
  14. இசைவிழி செம்பியன் (சுபாஜினி) ஊடகவியலாளர் (வன்னி)
  15. சுரேஸ் லிம்பியோ ஊடகப்பணியாளர் (வன்னி)
  16. ரி.தர்மலிங்கம் ஊடகப்பணியாளர்
    19.பரநிருபசிங்கம் தேவகுமார் ஊடகவியலாளர்
  17. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஊடகவியலாளர்
  18. சசி மதன் ஊடகப்பணியாளர் (வன்னி)
  19. இராசையா ஜெயந்திரன் ஊடகவியலாளர்(வன்னி)
  20. மகாலிங்கம் மகேஸ்வரன்(வன்னி) ஊடகப்பணியாளர்
  21. மரியநாயகம் அன்ரன் பெனடிக்ற்(வன்னி) ஊடகப்பணியாளர்
  22. நல்லையா மகேஸ்வரன்(வன்னி) ஊடகப்பணியாளர்
  23. மேரி டென்சி(வன்னி) ஊடகப்பணியாளர்
  24. ஜெயராசா சுசிபரன்(வன்னி) ஊடகவியலாளர்
  25. மேரி அருளப்பன் அன்ரனிகுமார்(வன்னி) ஊடகப்பணியாளர்

இணைப்பாளர்
யாழ்.ஊடக அமையம்