அரசியலமைப்புச் சபை நிறைவேற்று அதிகாரத்தை மிஞ்சக் கூடாது- மைத்திரிபால

331 0

அரசியலமைப்புச் சபையை நடைமுறைப்படுத்தும் போது, அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படுத்தப்படக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

நேற்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் இன்று அரசியலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

19வது திருத்தத்தின் ஊடாக உருவானவையே சுயாதீன ஆணைக் குழுக்களாகும். அது பிழையான வழியில் செல்லுமானால்  நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கும் சமூகம் விரும்பும் நோக்கங்களை அடைந்துகொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.