ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன கூட்டிணைவது சம்பந்தமாக இதன்போது பேசப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறினார்.
இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் சில இதற்கு முன்னரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறினார்.