இந்தியாவின் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் பேருந்து ஒன்று நீர்த் தேக்கம் ஒன்றில் விழுந்ததில் பத்து பேர் பலியாகியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பேருந்தில் பயணித்த மேலும் 17 பேர் பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 32 பேர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் பேருந்தில் பயணித்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து நீர்த் தேக்கத்தை கடக்க முற்பட்டபோது கட்டுப்பட்டை இழந்து நீர்த் தேக்கத்தினுள் சரிந்துள்ளது.