அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக ஜே வி பியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே வி பியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை.
ஜே வி பியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர்களால் உறுதிப்படுத்தவும் முடியாது.
பொய்யான பிரச்சாரங்களை செய்து மற்றையவர்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாக உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் புகைப்பொருட்களின் பாவனையை பாரிய அளவில் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.