பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய வலயத்திற்கான ஒத்துழைப்பு மாநாட்டை இலங்கை புறக்கணித்தமையானது, வருந்தத்தக்க செயல் என முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டின்மூலம் தெற்காசிய வலயத்திற்கான விழுமியங்களை இலங்கை, தூக்கியெறிந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் இந்த செயற்பாடு சார்க் அமைப்பை மேலும் வலுவிழக்கச்செய்துள்ளதாகவும் ஜீ எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்
இதனிடையே, இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிய நாடுகளுடன் நட்பாக செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.