ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை எதிர்காலத்தில் எமது தேசிய நகரத்திட்டமிடல் வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்க எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பாக வட மாகாண ஆளுனரிடமும், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மக்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இவ்வாறான அபிவிருத்திகளை முன்னெடுபதற்கான கலந்துரையாடல்கள் சில இடம்பெற்றுள்ளன.
யாழ்பாணத்தை மூலோபாய நகராமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதியுதவினைப் பெறுமாறு எமது அமைச்சிலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமைக்கமைய அந்த நிதி எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
காலி, கண்டி, அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களையே மூலோபாய நகராக்க திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களையும் மூலோபாய நகராக்க வெளிநாட்டு நிதியுதவியினைக் கோரியுள்ளோம்.
அத்தோடு சாதரணமாக வளர்ச்சியடைய முடியாத சில நகரங்களை இனங்கண்டு அவற்றினையும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.