சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமரட்சி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று வியாழக்கிழமை (21) முற்பகல் அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்களை மீட்ட பொலிஸார் அதனை வைத்திருந்த வர்த்தகர் ஒருவரையும் கைது செய்தனர்.