அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
மத்திய வங்கியின் முறி விற்பனை மோசடி குற்றச்சாட்டு தொடர்பான கோப் குழுவின் அறிக்கையே சமர்ப்பிக்கப்படவுள்ளது
இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 5ஆம் திகதி கோப் குழுவில் அது தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.
கோப் குழு உறுப்பினர்கள் குறித்த அறிக்கைக்கு அங்கிகாரம் வழங்கும்பட்சத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.