ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது .

465 0

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி 40 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு ஐநா நோக்கி செல்லும்   ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது. ஈருருளிப்பயணம் செல்லும் வழிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழின அழிப்பிற்கு நீதிகோரும் மனு கையளிக்கப்பட்டு பயணத்தை தொடர்ந்தவண்ணம் உள்ளனர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு யேர்மன் சார்புருக்கன் நகரபிதாவுடனும் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழின அழிப்பிற்கு பரிகார நீதிகோரும் முகமாக ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் எதிர்வரும் 04.03.2019 அன்று ஐநா நோக்கி ஈகைப்பேரொளிகளின்   திடலுக்கு அணிதிரளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். 

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  நான்காவது நாளாக இன்று 21/02/2019 அர்லோனில் இருந்து ஆரம்பிக்கும் ஈருருளிப்பயணம் லக்சம்பேர்க்கை ஊடறுத்து பிற்பகல் 16.00 மணிக்கு ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குல் பயணிக்கும்.