பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

343 0

201609180356061175_sue-on-kannada-actors-for-national-unity-talks-against_secvpfபயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும்நிலையில் அது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், விரைவில் நடைபெறவிருக்கும் இந்த உயர் மட்டப் பேச்சுவார்த்தையில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேற்குலக நாடுகளில் அமுலிலுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் காணப்படும் தீவிரவாத ஒழிப்பு, இணையவழி குற்றங்கள், பொருளாதாரம் சார் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவற்றிற்கெதிரான சரத்துக்கள், இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் உள்ளடக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுக்கும் மற்றும் நீதிக்காகவும் குரல் கொடுக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கெதிராக பயங்கரவாதத் தடைச்சடத்தில் அமுல்படுத்தப்பட்ட சில நடைமுறைகளையும் புதிய சட்டத்தில் உள்வாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.