பல்வேறு குற்றச் செயல்கள் சம்பந்தமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, சீதுவை மற்றும் ஜாஎல ஆகிய பிரதேசங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவங்களில் தேடப்பட்டு வந்த இவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் கைத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஜாஎல மற்றும் கம்பளை பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 41 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
நீர்கொழும்பு சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.