கதிர்காம புனித பூமியில் மின்சாரக் கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
லங்கை மின்சார சபையின் 50 வருடகள் நிறைவு மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயகவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கதிர்காமம் புனித பூமியில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது கிரிவேஹேர விஹாராதிபதி சங்கைக்குரிய கொப்பவக்க தம்மன்ந்த தேரரிடம் நல்லாசிகளைபெற்றுக்கொண்டார்.