தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்!

291 0

rejinold-corey-720x480நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியாற்றவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுவிழாவின் இறுதி நாளான நேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உலகிலே பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் உள்ளதால் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எனினும் எவ்வித வேறுபாடுகளும் அற்ற மார்க்கமாக விளையாட்டுப் போட்டிகள் மாத்திரமே காணப்படுவதுடன் வீரர்கள் அதற்கேற்ப செயற்படவேண்டிய தேவை காணப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியை தான் அனைத்து இன, மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகவே பார்ப்பதாகவும், எனவே இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டுமெனவும் தெரிவித்தார்.

துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்ட எமது நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் வியர்வை இன்று இங்கு விழுந்தன, ஆனால் கடந்த 30 வருடங்களாக எமது பிள்ளைகள் அநியாயமாக இரத்தம் சிந்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.

தறபோது ஆட்சியமைக்கும் மைத்திரிபால சிறிசேன, ரணில்விக்கிரமசிங்க மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் நாட்டில் சாந்தியும் சமாதானமும் மலர உழைக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.