வடக்கு மாகாண மக்களின் ஆதரவை வெளிக்காட்டுவதற்காக 10 ஆயிரம் கையொப்பத்தை திரட்டும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாயர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்குமேலும் தெரிவிக்கையில்
ஆளுநர் என்ற ரீதியிலும் இந்த நாட்டின் குடிமகன் என்ற ரீதியிலும் தமிழன் என்ற ரீதியிலும் மலையக மக்களின் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபா என்ற கோரிக்கையை ஆறு மாத காலமாக வைத்துள்ளார்கள். இது அரசியல் பொருளாதார சமூக கலாச்சாரப் பிரச்சினையாக மாறிக்கொண்டு வருகின்றது.
மலையக மக்களின் வரலாற்றைப் பார்க்கும் போது அவர்கள் நாட்டிற்கு வந்ததும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கின்றபோதும் 150 வருடங்களாக அவர்களது வாழ்க்கையில் தேவையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதைப் பார்க்கும் போது கவலையாகவுள்ளது.
ஏனைய தமிழ்பேசும் சமூகங்களை விட அவர்கள் பின் தங்கிய நிலையிலுள்ளார்கள். கல்வி விளையாட்டுத்துறை என்று பார்க்கும் போது மலைய சமூகத்தைப் பார்க்கையில் பின்தங்கியே உள்ளார்கள். இன்று அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
அவர்களது இந்தக் கோரிக்கையை காலம் தாழ்த்தாது நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்களே அரசு காணி சொந்தக் காரர்கள் தேயிலை உற்பத்தியாளர்கள் தேயிலை ஏற்றுமதியாளர்கள் என பல குழுக்கள் இருக்கின்றதன. இவர்கள் மத்தியில் அரசியல் இருக்கலாம் பொருளாதார நிபுணரர்கள் இருக்கலாம். இவர்கள் தேயிலைத் தோட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு செவிசாய்க்கவேண்டும்.
இம் மக்களின் போராட்டத்திற்கு சிலர் ஆயிரம் ரூபா கொடுத்தால் தாம் நஷ்டம் அடைந்து விடுவோம் என ஊடாகங்கள் அறியக்கிடைக்கின்றது. அவ்வாறு கூறுபவர்கள் தமது நிறுவங்களை இழுத்து மூடி அதனை மக்களிடம் கொடுத்துவிட்டு போகலலாம். இனியும் இதனைப் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது எனவே மலைய மக்கள் தலைவர்களிடமும் இதற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் கேட்டுக்கொள்வது தயவுசெய்து இந்தப் பிரச்சினைத் தீர்த்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.
வடக்கு மாகாணத்தில் இருந்து பத்தாயிரம் கையொப்பங்கள் திரட்டி அனுப்பிவைக்கவுள்ளதுடன் பொது நாளில் கறுப்புப் பட்டி அணிந்து அடையாளப்படுத்தப்படவுள்ளோம் ஆகையால் மலையக மக்களின் போராட்டத்திற்கு பின்னால் வடக்கு மாகாணண மக்களும் இருக்கின்றார்கள் என்ற அர்த்தத்தை கையெழுத்துப் பேராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளோம் இதற்கு ஊடகங்களும் இதில் அக்கயைள்ளவர்களும் கையெப்பங்களை பெற்றுத்தருமாறும் இதற்காக வீடு வீடாக சென்று இதனைத் தெளிவு படுத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.