கடந்த காலத்தில் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள் பதவி விலகி அரசியலமைப்பு பேரவைக்கு புதியவர்களை நியமிக்க இடமளிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியினால் பாராளுமன்ற உறுப்பினர் அறையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இருக்கும் மோசடிமிக்க நிறுவனமாக சபாநாயகரின் தலைமையில் இருக்கும் அரசியலமைப்பு பேரவை இருக்கின்றது. அரசியலமைப்பு பேரவையில் இருக்கும் சதித்திட்டம் தொடர்பாக நாங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதத்தில் வெளிப்படுத்துவோம் எனவும் இதன்போது தெரிவித்தார்.