பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வந்தாலே நாட்டிற்குள் ஒருமித்து வாழ முடியும் -சுவிஸ் உயர்தானிகரிடம் சி.வி-

551 0

k800_image3சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர வேண்டும்.
இவை நடந்தால்தான் நாட்டிற்குள் சம உரிமையுடன் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒருமித்து வாழ முடியும். சம உரிமை இல்லையேல் நல்லிணக்கத்திற்கு சாத்தியம் இல்லை.
இவ்வாறு இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூவிடம் வடடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சுவீஸ் உயர்ஸ்தானிகள் கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
சுமோட்டாவுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், வட மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற் திட்டங்கள், சுவீஸ் அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் குறித்த குழுவினர் வடமாகாண முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டனர்.