ரஞ்சனின் கருத்து தொடர்பில் விசாரணை செய்ய குழு நியமனம்!

217 0

கொக்கைன் பயன்படுத்துபர்களுள்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதை விசாரணை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே இக் குழு நியமிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராய்ந்து அடுத்த செயற்குழு கூட்டத்தின் போது, அறிக்கை சமர்ப்பிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் மாரசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரான நிஸ்ஸங்க நாணயக்கார ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.