புனர்வாழ்வுக் கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை!

348 0

2aebb15d1e90453d9af2bff2d0d03145_lபுனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின் உறவுகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொர்பில் அமைச்சர் சுவாமிநாதனை இவ்வாரம் நடைபெறவுள்ள நாடாளுமனற அமர்வின்போது சந்தித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் 23 அரசியல் கைதிகளுக்கு ஆறு மாத புனர்வாழ்வு அளித்து விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பெயர்ப்பட்டியல் வெளியானது.

இவ்வாறான நிலையில் புனர்வாழ்வு பெயர்ப்பட்டியலில் பெயர் குறிப்பிட்ட இருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு அரசியல் கைதிக்கு இரு வருட சிறைத் தண்டனையும் மற்ற அரசியல் கைதிக்கு ஒரு வருட சிறை மற்றும் ஒரு வருட புனர்வாழ்வும் வழங்கப்பட்டுள்ளது.

ஆறு மாத புனர்வாழ்வுக்கு பின்னர் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் அவர்களது உறவுகள் கவலை அடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.