பீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி மூடல்

369 0

201610030729561043_syria-conflict-aleppo-bombing-shuts-largest-hospital-obama_secvpfபீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியின்கீழ் உள்ள அலெப்போ நகரின் பல பகுதிகளிலும் ரஷிய படையினரின் பேராதரவுடன் சிரியாவின் அதிபர் ஆதரவு படையினர், கிளர்ச்சியாளர்களை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் வான்வழி தாக்குதலும், மற்றொரு பக்கம் தரை வழி தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே இந்த சண்டையில் குழந்தைகள் உள்பட 400 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அந்த நகரில் பீப்பாய் குண்டுகளை வீசியதில், நகரின் மிகப்பெரிய ஆஸ்பத்திரி பெருத்த சேதத்தை அடைந்துள்ளது. கட்டிடங்கள் மட்டுமல்லாது, சாதனங்களும் நாசமாகி உள்ளன. இதன்காரணமாக செயலிழந்த நிலையில், அந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் நோயாளிகள் 2 பேர் உயிரிழந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை அந்த ஆஸ்பத்திரியை நிர்வகித்து வருகிற சிரிய அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பிற ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன் மார்க் ஆய்ரால்ட்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.