எக்வடோரின் ஆளும் கட்சி, முன்னாள் துணை அதிபரும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடிவருபவருமான லெனின் மொரீனோவை அடுத்த பிப்ரவரியில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளாராக அறிவித்துள்ளது.
மொரீனோ 1998 ஆம் ஆண்டு சுடப்பட்ட பிறகு முடக்குவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியை பயன்படுத்த தொடங்கிய அவர், ஐ.நாவின் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தூதராகவும் இருந்தார்.
தற்போதைய இடது சாரி அதிபர் ரஃபால் கொராயாவின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார்.
எக்வடோர் எண்ணெய் வளம் மிக்க ஒரு நாடு ஆனால் தற்போதைய எண்ணெய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டின் அடுத்த தலைவர் மக்களுக்கு பிடிக்காத சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.