காணிகள் அற்ற நிலையில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கான காணிகள் கீரிமலையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள 40 ஏக்கர் காணிகள் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பரவு செய்யப்படும் காணிகளில் குடியேறிக் கொள்வதற்கான இதுவரையில் 46 குடும்பங்கள் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பல நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளார்கள். கடந்த 26 வருடங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் நலன்புரி நிலையங்களில் அம்மக்கள் தங்கியிருந்த காரணத்தினால் அவர்களின் குடும்பங்களிலும் பெருக்கம் ஏற்பட்டிருந்தது.
இதனால் காணிகள் அற்ற நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் தொகையும் அதிகரித்துக் காணப்படுகிற்றது. இந்நிலையில் வலி.வடக்கின் சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் நல்புரி நிலையங்களில் உள்ள மக்களுடைய தொகைகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.
இதனால் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளை இவ்வாறு காணிகள் அற்ற நிலையில் முகாங்களில் தங்கியுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கீரிமலையில் 160 ஏக்கர் காணிகள் இவ்வாறு காணி இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கான இணங்கானப்பட்டுள்ளது.
இதன்படி இக் காணிகளில் குடியேறிக் கொள்வதற்காக முதலில் 46 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கைளில் இராணுவத்தினரும்ரூபவ் யாழ்.மாவட்டச் செயலகத்தம் மற்றும் தெல்லிப்பளை பிரதே செயலகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இக் காணிகளில் குடியேறிக் கொள்ளும் குடும்பங்களுக்கு முதலில் 100 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இராணுவத்தினர் முன்வந்துள்ளனர். மேலும் 50 வீடுகள் அங்கு குடியேறிக் கொள்பவர்கள் அமைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்ப்டுள்ளது. இதுமட்டுமல்லாது இங்கு குடியேறிக் கொள்ளும் குடும்பங்களுக்கான போக்குரத்து வீதிகள்ரூபவ் தொழில் வாய்ப்புக்கள், இறங்குதுறைகள் என்பவற்றினை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.