‘குடியேறிகள் தொடர்பாக ஹங்கேரியின் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு’

294 0

_91492527_be936d39_3031590gஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்கின்ற “கோட்டா முறை” தொடர்பாக ஹங்கேரி நடத்துகின்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு என்று ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் எச்சரித்திருக்கிறார்.

அகதிகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் ஹங்கேரி அரசு ஆபத்தானதொரு விளையாட்டை மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் எச்சரித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள “கோட்டா முறையை” ஏற்று கொள்வதா, மறுப்பதா என்பது தொடர்பாக ஹங்கேரி மக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.

இந்த கோட்டா முறைக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஒர்பான், ஐரோப்பிய சட்டங்களின் சட்டபூர்வ தன்மைக்கு சவால் விடுத்துள்ள்தாகவும், ஹங்கேரிக்கான ஐரோப்பிய ஒன்றிய நிதி ஆதரவு குறைப்பு ஏற்படும் ஆபத்தை உருவாக்கி இருப்பதாகவும் சூல்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய பாதுகாப்பிற்கும், வாழ்க்கை முறைக்கும் குடியேறிகள் மிக பெரிய அச்சுறுத்தல் என விக்டோர் ஒர்பான் கூறுகிறார்.

அவருடைய விமர்சகர்கள் வெளிநாட்டினர்களுக்கு எதிரான உணர்வுடன் அவர் செயல்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு செல்லுப்படியாக வேண்டுமென்றால் குறைந்தது 50 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருக்க வேண்டும்.