யுத்தக்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – வாசுதேவ

269 0

நாட்டில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எனினும் இராணுவ வீரர்களால் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதனை எமது நாட்டு சட்டத்தின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளலாம் என்றார்.

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டம் இடம்பெறும்போது தமிழ் அரசியல்வாதிகள் எமது இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பார்கள். பேரவை முடிந்தவுடன் அது தொடர்பில் வாய்திறக்கமாட்டார்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தேவை இவர்களுக்கு இல்லை. வெறுமனே அரசியல் நோக்கத்திலே இவர்கள் செயற்படுகின்றனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

சோசலி மக்கள் முன்னணியினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.