பிரதமரின் செய­லாள­ரின் திருடப்பட்ட தொலை­பேசி மீட்பு

305 0

ரணில் விக்­கி­ரம சிங்­க­வின் பெண் செய­ல­ரின் தொலை­பேசி, யாழ்ப்­பாண நக­ரத்­தி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலை­யத்­தி­லி­ருந்து பொலி­ஸா­ரால் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு சென்றிருந்த போது. யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலைக்­குச் சென்று கட்­ட­டத்தை திறந்து வைத்­தார்.

இந்த நிகழ்­வுக்கு அவ­ரின் பெண் செய­ல­ரும் சென்றிருந்­தார். அவ­ரது தொலை­பேசி அங்கு வைத்து கள­வா­டப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பில் யாழ் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

பொலி­ஸார் நீதி­மன்­றின் அனு­ம­தி­யு­டன், தொலை­பே­சி­யைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். யாழ்ப்­பாண நக­ரி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலை­யத்­தி­லி­ருந்து தொலை­பேசி நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளது.

அரி­யா­லை­யைச் சேர்ந்த சந்­தேக நபர் ஒருவர் குறித்த  தொலை­பே­சியை விற்­பனை செய்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இருப்­பி­னும் சந்­தே­க­ந­பர் இது­வரை கைதா­க­வில்லை.

இதே­வேளை, யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலையி­லுள்ள மறை­கா­ணி­யின் (சி.சி.டி.வி.) உத­வி­யு­டன் சந்­தேக நபர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.