மிளகு மோசடியால் ஒதுக்கீட்டை இழக்கவுள்ள இலங்கை!

233 0

வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி, இலங்கை வர்த்தகரொருவர் கடந்த வருடம் இலங்கையின் பெயரின் கீழ் வியட்நாம் மிளகுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதன் காரணமாக, இலங்கை மிளகை இந்தியாவுக்கு அனுப்புவதால் கிடைத்து வந்த ஒதுக்கீடு இலங்கை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிளகு தரமற்றது என்பதாலேயே இலங்கைக்கு கிடைத்து வரும் ஒதுக்கீடு இழக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலங்கை வர்த்தகரால் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் இலங்கையின் நாமத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ள மிளகின் மூலம் அவர் 1440 மில்லியன் ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் வியட்நாமிலிருந்து 2800 மெட்றிக் தொன் மிளகினை இறக்குமதி செய்துள்ளாரென்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், கடந்த வருடம் வியட்நாமிலிருந்து கொண்டுவரப்பட்ட கன்டைனர்களில் 136 கன்டைனர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.