நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும்

332 0

may-raneil-02-600x450ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக் காலத்தின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து வாழ் இலங்கையர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிறைவேற்று அதிகார முறைமையை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.