சிறைச்சாலை வைத்தியசாலையில் துமிந்த சில்வா

320 0

r_duminda_silvaசிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மரண தண்டனைக் கைதி துமிந்தசில்வா நாளை அல்லது நாளை மறுதினம் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்குமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களாக வெலிக்கடை சிறைச்சாலைவைத்தியசாலையில் துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளரும், ஆணையாளருமான துசார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவரது உடல்நிலை சிறந்த முறையில் இருப்பதால் இவர் மீண்டும்சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது