ஹட்டன் நகரில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

230 0

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  என்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டன் நகரில்  அத் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  ஒன்றை சோசலிச  சமத்துவ  கட்சியின் வழிகாட்டலின் கீழ் இன்று மதியம் முன்னெடுத்தது.

தோட்ட நிர்வாகத்தின்  செயற்பாட்டுக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகத்தை கண்டித்து எதிர்ப்பு பாதைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஐம்பதுக்கும்  அதிகமானோர் கலந்து கொண்டனர்.

குறித்த தோட்டத்தின் இரண்டு  பிரிவுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்  காங்கிரஸ் கட்சியின் தோட்டக்கமிட்டி தலைவர்களை அத்தோட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை ஆட்சேபித்த்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பணிகளுக்கு எதிராக கடந்த  டிசம்பர் மாதம் ஹட்டன் என்பீல்ட் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்பாட்டத்தின் போது   குறித்த தோட்டக்கமிட்டிகள் இருவரும் அத்தோட்ட தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்ட தேயிலை கொழுந்தினை தடுக்கும் செயலில் ஈடுப்பட்டனர் என்ற குற்றசாட்டில் இவர்களுக்கு  நிர்வாகம்  பணிநீக்கம் செய்திருந்தது.

அதேவேளையில் இவ்விரு  தோட்ட கமிட்டி தலைவர்களுக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இவர்களை பணிநீக்கம் செய்தது தொடர்பில் இவர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  உயர் பீடத்திற்கு அறிவித்தும்  எந்தவோர் நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.

ந்த நிலையில் இவ்விடயத்தை அறிந்த சோசலிச சமத்துவ கட்சியின் அமைப்பாளர் ராசலிங்கம் ஸ்ரீகரன் ஏற்பாட்டில் குறித்த தோட்ட கமிட்டிகள் இருவரையும் மீண்டும் பணியில் இணைத்து கொள்ளவும், இவர்கள் மீதான வழக்குகளை தோட்ட நிர்வாகம் வாபஸ் பெற வேண்டுமெனவும் வழியுறுத்தி ஆர்பாட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக இவர்களுக்கு ஆதரவாக  ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ள அதேவேளை நிர்வாகத்தின் பக்கம் காங்கிரஸ் சாந்துள்ளதால் தொழிலாளர்களும் தொழிலாளர்களின் தோட்ட கமிட்டிகளும் வஞ்சிக்கப்பட வேண்டுமா எனவும் விமர்சனம் எழுப்பியுள்ளனர்.