அன்ரனி ஜெகநாதனின் மறைவு எமது பலத்தின் இழப்பு!

299 0

14484940_1613408668685359_7387599784054474086_nஎமது உரிமைக்கான பயணம் முற்றுப்பெறாத தருணமென்றில் இந்த பயணம் பற்றி அனுபவபூர்வமாக வரலாற்றோடு, நடந்து வந்தவர்களை இழப்பது இனத்திற்கு பலத்தை இழப்பதாகும்.

அந்த வகையில்தான் மாரடைப்பினால் நிரந்தர பிரிவெய்தியிருக்கின்ற அன்ரனி ஜெகநாதன் அவர்களின் இழப்பும் அமைகின்றது.

அன்ரனி ஜெகநாதன் அவர்கள் போரின் நீட்சியாக வந்த தமிழர்களின் அரசியலில் வடக்கு மகாண சபை என்ற மக்களின் ஏகோபித்த செய்தியாக அமைந்த அலகின் முதலாவது பிரதி அவைத்தலைவர் என்ற தகைமையை பெறுகின்றார்.

தனது பிரதிநிதித்துவத்தின் மூலம் முல்லைத்தீவு மக்களின் அணல் தெறிக்கும் குரலாக அவர் இறக்கும்வரை செயலாற்றியுள்ளார்.

ஜனநாயக கட்டமைப்புக்குள் நிகழக்கூடிய கருத்துக்கள் விவாதங்கள் கேள்விகள் தீர்வுகள் தொடர்பில் அவர் தனது உரிமையை பயன்படுத்த தவறவில்லை.

ஒரு மக்களின் பிரதிநிதியாக மக்களின் நாடித்துடிப்பை வெளிப்படுத்த வேண்டிய தேவையில் அவர் இருந்தார்.

அமரர்அன்ரனி ஜெகநாதன் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் முல்லைத்தீவு மண் குறிப்பாக நகரம் நெடுங்கால ஆக்கிரமிப்பு சுனாமி பேரழிவு இறுதிப்பெரும்போரின் பேரழிவுகள் என்பவற்றின் வடுதாங்கிய அடையாளமாக உள்ளதால் அன்ரனி ஜெகநாதன் மேல் மிகவும் பாரிய பணி தோள்களில் இருந்தது.

முல்லைத்தீpவின் நாடித்துடிப்பு அவருக்கு நன்றாகவே தெரியும்.எனவேதான் அதை அறிந்து அவர் பணியாற்ற பெரிய பாய்ச்சல்களை செய்யவேண்டியிருந்தது. ஓயாமல் இயங்கவேண்டியவராக இருந்தார்.

எனவேதான் முல்லைமண் தன் இதயத்துடிப்பை உணரும் ஒருவரை இன்று இழந்துவிட்டது என சொல்லலாம்.

வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து மறைந்த அமரர்.கனகசுந்தர சுவாமியை தொடர்ந்து அன்ரனி ஜெகநாதன் அவர்களின் இழப்பு முல்லை மக்களை வெகுவாக பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே அன்ரனி ஜெகநாதன் அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் முல்லைத்தீவு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை வன்னி மாவட்ட மக்கள் சார்பிலும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.