புதிய-பதவிகளை-வழங்கும் நோக்கில் தேசிய அரசை உருவாக்கினால் முற்போக்குக் கூட்டணி இடமளியாது!

221 0

மேலும் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நோக்கில் தேசிய அரசை
உருவாக்க முயற்சித்தால் தமிழ் முற்போக்கு கூட்டனி ஒரு போதும் அதனை
ஏற்று கொள்ளாது

இவ்வாறு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி வெஸ்டோல் தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்ட 40 தனி வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

தற்போதுள்ள அரசின் ஊடாக அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்கள் போதுமானவர்கள். இவர்கள் தமது பதவிகளை வைத்து கொண்டு மக்களிடம் சென்று மக்களுக்கான சிறந்த சேவையை முன்னெடுக்க முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் அந்தஸ்த்துள்ள அமைச்சி பதவிகளைப் பெற்று கொள்வதற்காக தேசிய அரசு என்ற பெயர் பலகைகளை பொருத்த முனைகின்றனர். நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்த சம்பளத்தை அரசின் மூலமாக ஒரு தொகையைப் பெற்று கொடுக்க உள்ளோம்.

அவ்வாறு வழங்காவிட்டால் இந்த அரசுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க நாங்கள் தயாரக உள்ளோம். தற்பொழுது தேசிய அரசு அமைப்பது குறித்து அரசு கலந்தரையாடி
கொண்டிருக்கிறது.

ஆனால் நாட்டில் எற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது கடந்த 51 நாள்களாக தமிழ் முற்போக்கு கூட்டனி முழுமையான ஆதரவை இந்த அரசுக்கு வழங்கி வந்தது. இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கும் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கும் நாங்கள் கைகொடுத்தோம்.என்றார்.